பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு முறையே ரூ.27 காசுகள், ரூ.14 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலையானது இன்று நள்ளிரவு முதல்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:47 pm

DIN

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு முறையே ரூ.27 காசுகள், ரூ.14 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலையானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இனி வரும் காலங்களில், எரிபொருள் விலையானது நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த புதிய நடைமுறை வெள்ளிக்கிழமை (ஜூன் 16) முதல் அமலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல் நாளுக்கான பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.12-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.24-ம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.27 காசுகள் குறைந்து, ரூ.67.15க்கு விற்கப்படும். அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.14 காசுகள் குறைந்து, ரூ.56.89க்கு விற்கப்படும்.

இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.