ஒரு நாளைக்கு ஒன்பது பேர்! விண்ணுக்கு அனுப்பும் வேகத்தடைகள்!

நாடு முழுவதும் சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடைகள் மூலமாக, சராசரியாக ஒரு நாளைக்கு 30 விபத்துகள் நடப்பதும், அதன் காரணமாக 9 பேராவது உயிர் இழக்கும் அவலமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒரு நாளைக்கு ஒன்பது பேர்! விண்ணுக்கு அனுப்பும் வேகத்தடைகள்!
Published on
Updated on
1 min read

புதுதில்லி: நாடு முழுவதும் சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடைகள் மூலமாக, சராசரியாக ஒரு நாளைக்கு 30 விபத்துகள் நடப்பதும், அதன் காரணமாக 9 பேராவது உயிர் இழக்கும் அவலமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகமானது நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துக்கள் தொடர்பான புள்ளி விபரங்களை சேகரித்து வருகிறது. ஆனால் கடந்த    இரண்டு வருடங்களாகத்தான் வேகத்தடைகள் மூலம் நடக்கும் மரணங்கள் பற்றிய தகவல்களையும் சேகரித்து வருகிறது.

இந்த புள்ளி  விவரத் தொகுப்பின் மூலம் நாடெங்கும் வேகத்தடைகள் மூலமாக, கடந்த இரண்டு வருடங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 30 விபத்துகள் நடப்பதும், அதன் காரணமாக 9 பேராவது உயிர் இழகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலும் தெரிய வந்துள்ளது. தவறான வடிவமைப்பு, சரியில்லாத கட்டுமான பொருட்கள் மற்றும் வேகத்தடைகளின் தேவை குறித்து முறையான கள ஆய்வு நடத்தப்படாதது ஆகியவையே இதற்கான காரணங்களாக இருக்கின்றன.  

2014- ஆம் ஆண்டினை பொறுத்த வரை நாடு முழுவதும் வேகத்தடைகள் மூலமாக 11,008 விபத்துகள் நடந்திருப்பதாகவும், அதன் காரணமாக 3,633 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் புள்ளி விபரக் குறிப்பில் இருந்து தெரிய வருகிறது. அதே போல், 2014- ஆம் ஆண்டில் 11,804 விபத்துக்களில் 3,409 பேர் மரணமடைந்துள்ளனர்.

அதிர்ச்சியூட்டும் விதமாக 2015-ஆம் ஆண்டில் இந்தியாவில் வேகத்தடைகள் மூலமாக நிகழ்ந்துள்ள மரணங்களின் எண்ணிக்கையானது (3,409), ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளிலும் சேர்த்து சாலை விபத்துகளினால் மரணமடைந்தவர்ககளின் எண்ணிக்கையை (2,937) விட அதிகமாகும்.

வேகத்தடைகளின் மூலமாக அதிக அளவு மரணங்கள் சம்பவிப்பதை ஒத்துக் கொண்ட மத்திய சாலை  போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ' நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் வேகத்தடைகளை அமைக்கும் பொழுது சரியான் விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளோம்' என்று தெரிவித்தார். மேலும் அவ்வாறு உருவாக்கும் பொழுது அதன் தேவைகள் குறித்து முறையான ஆய்வுகள் நடத்திய பிறகுதான் அவற்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com