புதுதில்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த், தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்தார்.
ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பவர் பிகார் கவர்னரான ராம்நாத் கோவிந்த். இவர் இதற்கு முன்பாக பாஜக செய்தித் தொடர்பாளராகவும், அக்கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.
தற்பொழுது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவை தற்பொழுதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.
மேற்கு வங்க ஆளுநராக உள்ள கேசரி நாத் திரிபாதி, பிகார் ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!

பாஜகவில் ஆம் ஆத்மி எம்பிக்கள்! குடியரசுத் தலைவரை சந்திக்கும் பஞ்சாப் முதல்வர்!

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


