புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம் கக்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த

News image
Updated On :22 ஜூன் 2017, 2:51 am

DIN


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம் கக்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்த பயங்கரவாதிகளிடமிருந்து 3 ஏகே-47 ரக துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

உயிரிழந்தவர்கள் லக்ஷர் இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மஜித் மீர், ஷரிக் அகமது மற்றும் இர்ஷாத் அகமது என அடையாளம் காணப்பட்டது.

மேலும், வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.