தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராம்நாத் கோவிந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் தனது வேட்பு மனுவை இன்று வெள்ளிக்கிழமை 12 மணியளவில்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:16 pm

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் தனது வேட்பு மனுவை இன்று வெள்ளிக்கிழமை 12 மணியளவில் தாக்கல் செய்தார்.

பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் (71) கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ள அவர், பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு இருமுறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் தாழ்த்தப்பட்டோர் பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டுமல்லாது, கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம், அதிமுகவின் இரு பிரிவுகள், தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, அவர் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை 12 மணியவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி முன்னிலையில் மக்களவை செயலாளரிடம் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மனுத்தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இருவரும் முன்மொழிந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், எம்.பி.க்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூலை 20-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.