ஜி.எஸ்.டியால் விலைவாசி உயராது : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!

நாடு முழுவதும் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையால் விலைவாசி உயராது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டியால் விலைவாசி உயராது : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!

சென்னை: நாடு முழுவதும் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையால் விலைவாசி உயராது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறியதாவது:

நாடு முழுவதும் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை குறித்து தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு உள்ள சந்தேகங்களை தீர்க்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக வலைத்தளங்களிலும் விரிவான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் நாடு முழுவதும் அவர்களின் அச்சங்களை போக்குவதற்காக மாவட்ட தலைநகரங்களில் விரைவில் கருத்தரங்கள் நடத்த ஏற்பாடு செய்யபப்டும்.  

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையில் இடம்பெற்று உள்ள அம்சங்கள் பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்டவை இல்லை. இதற்கென மாநில அமைச்சர்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி கவுன்சில் ஆலோசித்து கொண்டு வந்த அம்சங்களாகும். 

அத்துடன் இந்த வரி விதிப்பு முறை அமல் செய்யபடுவதால் கண்டிப்பாக விலைவாசி உயராது. முக்கியாமாக ப்ராண்ட் பெயர் இல்லாமல் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு வரி கிடையாது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com