லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் ஏழாவது மற்றும் இறுதி கட்ட சட்டசபை தேர்தலில் நண்பகல் 12 மணி நிலவரப்படி 26% வாக்குகள் பதிவாகியுள்ளது.
எழு கட்டங்களாக நடைபெற்று வரும் உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.இதில் ஏழு மாவட்டங்களில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி மாநிலங்களவை தொகுதியிலுள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
வாரணாசியில் 23.76 சதவீத வாக்குகளும், நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள மிர்சாபூர் தொகுதியில் 26.63 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன,.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஓருவர், 'நண்பகல் 12 மணி நிலவரப்படி 26% வாக்குகள் பதிவாகியுள்ளது.தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.
எழு கட்டங்களாக பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 11-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பழனி பகுதியை குப்பை மேடாக வைத்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி

தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்: மக்களவையில் அமித் ஷா பதிலுரை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


