சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

450 கிலோமீட்டர் சென்று தாக்கும் பிரமோஸ் ஏவுகணை: இந்தியா வெற்றிகர சோதனை! 

450 கிலோமீட்டர் தொலைவு சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா இன்று  வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2017, 8:47 am

புதுதில்லி: 450 கிலோமீட்டர் தொலைவு சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா இன்று  வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா சில ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிகரமாக சோதனை செய்தது. பின்னர் 'ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு குழுமத்தில்'  இந்தியா ஜூன் 2016-ல் உறுப்பினரானது.   

தற்போது அதனைத் தொடர்ந்து பிரமோஸ் ஏவுகணையின் இலக்கு தூரம் 450 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து இன்று காலை 11 மணி அளவில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் அறிவித்தனர்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.