தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இறைச்சி கூடங்களுக்கு மாநில அரசு 'தடா': சிக்கனுக்கு மாறும் லக்னோ சிங்கங்கள்!

மாநிலம் முழுவதும் உள்ள இறைச்சிக்கூடங்களை படிப்படியாக மூட உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டிருப்பதன் காரணமாக லக்னோ மிருக காட்சி சாலையில் உள்ள சிங்கங்களுக்கு...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:18 am

தினமணி

லக்னோ: மாநிலம் முழுவதும் உள்ள இறைச்சிக்கூடங்களை படிப்படியாக மூட உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டிருப்பதன் காரணமாக லக்னோ மிருக காட்சி சாலையில் உள்ள சிங்கங்களுக்கு, வழக்கமான உணவான எருமை இறைச்சிக்கு  பதிலாக சிக்கன் உள்ளிட்ட உணவுகள்  வழங்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுபேற்றுக் கொண்டார்.பதவி ஏற்ற உடன் மாநிலம் முழுவதும் உள்ள இறைச்சிக் கூடங்களை படிப்படியாக மூட நடவடிகை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் பசுக் கடத்தலை தடுக்க முயற்சிகளை கடுமையாக வேண்டுமென்றும் அவர் கூறி இருந்தார்.

இதன் காரணமாக லக்னோ நகரில் உள்ள இறைச்சிக் கடைகளை மூடும் சூழல் உருவானது. இதன் உபவிளைவாக  லக்னோவில் உள்ள ஏதவா சிங்க காட்சி சாலையில் சிங்கங்களுக்கு உணவாக எருமை இறைச்சி வழங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது, எனவே அதற்கு மாற்றாக  மட்டன் மற்றும் சிக்கன் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.

இது குறித்து அதன் துணை இயக்குனர் அனில் பட்டேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த காட்சி சாலையில் உள்ள குட்டிகள் உள்ளிட்ட எட்டு சிங்கங்களுக்கு உணவு அளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.    ஒருநாளைக்கு எங்களுக்கு சிங்கங்களுக்கு மட்டும் 50 கிலோ அளவுக்கு எருமை இறைச்சி தேவைப்படுகிறது.ஆனால் தற்போதைய சிக்கல்களின் காரணமாக சிங்கங்களுக்கு மிகவும் பிடித்த எருமை இறைச்சிகுப் பதிலாக மட்டன் மற்றும் சிக்கன் வழங்குவது என்று முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறோம்.  

அதே போல் இங்கு உள்ள சிறுத்தை, கழுதைப் புலி, ஓநாய் மற்றும் நரி ஆகிய அனைத்து விலங்குகளுக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 235 கிலோ இறைச்சி தேவைப்படும்.ஆனால் கடந்த இரு நாட்களாக 80 கிலோ மட்டுமே கிடைக்கிறது.

எனவே தற்போது நாங்கள் லக்னோவுக்கு வெளியிலிருந்து குறைந்த செலவில் இறைச்சி வழங்கக்கூடிய விற்பனையாளர்களை தேடிக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.