அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தில்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் தீ விபத்து: ஒருவர் பலி

தில்லியில் நரேலா தொழிற்பேட்டை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

News image
Updated On :25 மார்ச் 2017, 8:49 am

தினமணி

புதுதில்லி: தில்லியில் நரேலா தொழிற்பேட்டை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நரேலா தொழிற்பேட்டை பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மலமலவென அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் பரவியது.

தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு 32 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.