ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கேரள முதல்வர் தலைக்கு ரூ. 1 கோடி பரிசு அறிவித்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் கைது

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலைக்கு ரூ. 1 கோடி பரிசளிப்பதாக அறிவித்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் குந்தன் சந்திராவத் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :29 மார்ச் 2017, 8:57 am

தினமணி

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலைக்கு ரூ. 1 கோடி பரிசளிப்பதாக அறிவித்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் குந்தன் சந்திராவத் கைது செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் விளம்பரப் பிரிவு கூடுதல் தலைவராக இருந்தவர் குந்தன் சந்திராவத்.
இவர், கேரளத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன்தான் காரணம் என்று அண்மையில் குற்றம்சாட்டினார். மேலும், பினராயி விஜயனைக் கொன்று அவரது தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்த குந்தன் சந்திராவத், தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டார். தொடர்ந்து, அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனிடையே, சந்திராவத் மீது மாதவ் நகர் போலீஸார் கடந்த 2-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, அவர் உஜ்ஜைனில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர் வர்மா கூறுகையில், 'தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குந்தன் சந்திராவத் ஆஜர்படுத்தப்பட்டார்; அவரை 14 நாட்கள் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.