வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

என் வழக்கை விசாரித்தவர்களின் சம்பளத்தில் மாதம் ரூ.50 ஆயிரம் பிடிங்க:  நீதிபதி கர்ணன் அதிரடி

என்  மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகளின் மாத சம்பளத்தில் மாதம் ரூ.50 ஆயிரம் பிடிக்க வேண்டும் என்று ..

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:10 pm

DIN

புதுதில்லி : என்  மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகளின் மாத சம்பளத்தில் மாதம் ரூ.50 ஆயிரம் பிடிக்க வேண்டும் என்று இன்று நீதிமன்றத்தில் ஆஜரான கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுயுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த  சி.எஸ்.கர்ணன் தற்போது மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பி, அதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதுகுறித்து தானாக முன்வந்து வழக்கு தொடுத்த உச்ச நீதிமன்றம் 2 முறை உத்தரவிட்டும் நீதிமன்றத்தில் கர்ணன் நேரில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமினில் வெளி வரக் கூடிய கைது வாரண்ட் பிறப்பித்து, இன்றைக்கும் அவரை கைது செய்து ஆஜர் செய்யுமாறு மேற்கு வங்க டி.ஜி.பிக்கு உத்தரவு பிறப்பித்தது.

இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் ஒரு தலித் சமூக நீதிபதியான நான் ஒரு பொது அலுவலகத்தில் என்னுடைய பணியை செய்ய விடாமல் தடுக்கப்படுகிறேன். இது அராஜகம் என்று நீதிபதி கர்ணன் பேட்டியளித்தார். .

இந்நிலையில் தில்லி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் இன்று நேரில் ஆஜரானார். நீதிபதிகள் மேல் குற்றம் சாட்டிய விவகாரத்தில் நான்கு வாரத்திற்குள் விளக்கமளிக்குமாறு அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நீதிபதி கர்ணன், 'என் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது சட்ட விரோதமானது என்றும்,  வழக்கை விசாரித்த ஏழு நீதிபதிகளுக்கு வரும் 3-ஆம் தேதி முதல் நீதிமன்ற பணிகள் எதுவும் வழங்கபடக் கூடாது எனவும்,.அவர்களது மாத சம்பளத்திலிருந்து ரூ.50 ஆயிரம் பிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனால் அங்கே பரபரப்பு உண்டானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.