வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

பிரிட்டன் குண்டு வெடிப்பு சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது: பிரணாப் முகர்ஜி இரங்கல்

இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பாப் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:35 pm

DIN

புது தில்லி: இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பாப் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,

இங்கிலாந்து, மான்செஸ்டர் நகரில் நேற்று இரவு ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை கேட்டதும் அதிர்ச்சியடைந்தேன். இது போன்ற சம்பவங்கள் கேட்கும் போது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். சம்பவ இடத்தில் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று பிரணாப் முகர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.