மும்பை தெருவோர வியாபாரிகள் விவகாரம்: ஃபட்னவீஸுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு
நாட்டின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பையில் தெருவோரங்களில் பொருள்களை விற்கும் வியாபாரிகள் விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸை மகாராஷ்டிர


நாட்டின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பையில் தெருவோரங்களில் பொருள்களை விற்கும் வியாபாரிகள் விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸை மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சந்தித்துப் பேசியுள்ளார்.
மும்பை நகரில் போக்குவரத்துக்கும், மக்கள் நடமாட்டத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை நடத்துவதாகக் கூறப்படுகிறது. நகரின் முக்கிய பகுதிகளிலும், ரயில் நிலையங்கள், ரயில் நடை மேடைகள் ஆகிய இடங்களிலும் அவர்களால் நெரிசல் அதிகரிப்பதாக கருதப்படுகிறது. அண்மையில் மும்பை ரயில் நடை மேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்துக்கும் தெருவோர வியாபாரிகள்தான் காரணம் என்று ஒரு தரப்பினர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், தெருவோர வியாபாரிகள் தங்களுக்கென்று ஒரு கொள்கையை மாநில அரசு வகுக்க வேண்டும் என்று கோரி மும்பையின் ஆஸாத் மைதானத்தில் புதன்கிழமை போராட்டம் நடத்தினர். அவர்களை ஆதரிப்பதற்காக அங்கு காங்கிரஸ் தொண்டர்களுக்கும், அதை எதிர்த்த எம்என்எஸ் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், தெருவோர வியாபாரிகள் விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸை (எம்என்எஸ்) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இது குறித்து அக்கட்சிப் பிரமுகர் பாலா நந்தகாவ்ன்கர் கூறுகையில், "நீதிமன்ற உத்தரவுகளை மாநில அரசு அமல்படுத்தியிருந்தால் தெருவோர வியாபாரிகளுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...