ஒரே இரவில் ஊழலை முடிவுக்கு கொண்டு வர முடியாது

ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதும், கருப்புப் பணத்தை களையெடுப்பதும் ஒரே இரவில் நடந்து விடாது என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவரும்
ஒரே இரவில் ஊழலை முடிவுக்கு கொண்டு வர முடியாது
Updated on
1 min read

ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதும், கருப்புப் பணத்தை களையெடுப்பதும் ஒரே இரவில் நடந்து விடாது என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவரும், பொருளாதார நிபுணருமான விவேக் தேப்ராய் தெரிவித்தார்.
நீதி ஆயோக் அமைப்பின் அதிகாரி கிஷோர் அருண் தேசாயுடன் இணைந்து தாம் எழுதியுள்ள 'ஆன் தி டிரையல் ஆஃப் பிளாக்: டிராக்கிங் கரப்ஷன்' என்ற ஆங்கிலப் புத்தகம் குறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: ஊழல் மற்றும் கருப்புப் பண ஒழிப்பு சாத்தியமா? என்று கேட்கிறீர்கள். தற்போது, நாட்டில் அந்த இரண்டையும் ஒழிப்பதற்கான பணி தொடங்கிவிட்டது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்மூலம், வங்களில் கணக்கு வைத்திருந்த போலி நிறுவனங்களை இனம் காண முடிந்தது. பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நமது நாட்டில், போக்குவரத்து விதிகளை மீறிவிட்டு, போக்குவரத்து அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பவர்கள்தான் ஊழலைப் பற்றி பேசுகின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக எதுவும் மாறிவிடாது என்ற போக்கில் இருந்தவர்கள், தற்போதைய மத்திய அரசின்மீது வருத்தம் கொள்கின்றனர். இதை நான் நேர்மறையாகவே எடுத்துக் கொள்கிறேன். கருப்புப் பணத்தை களையெடுப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.
'பனாமா', 'பாரடைஸ்' ஆவணங்கள் கசிவு விவகாரம் குறித்து மத்திய அரசு அமைப்புகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் விவேக் தேப்ராய். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com