

இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, வரும் 12-ஆம் தேதி பிலிப்பின்ஸ் செல்கிறார்.
இந்தியா-தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு(ஆசியான்) இடையேயான உச்சி மாநாடு, பிலிப்பின்ஸில் வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு, வரும் 12-ஆம் தேதி செல்லவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, இரு தரப்புக்கும் இடையே வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. அது மட்டுமன்றி, பிராந்திய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. மேலும், இந்த மாநாட்டிற்கு நடுவே, பிற நாட்டுத் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.
இந்தத் தகவல்களை, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு பிராந்தியச் செயலர் பிரீத்தி சரண் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.