மஹாராஷ்டிர மாநில அரசின் தகவல்களின் படி மாநிலம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப மற்றும் மேனிலை பள்ளிகளில் 1.80 கோடி மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பொருட்டு, மாநிலக் கல்வித் துறையின் சார்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 'சரல்' என்ற ஆன்லைன் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாணவர்களின் எணிக்கை, அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை. கூடுதலாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் காலியிடங்கள் உள்ளிட்ட எண்ணிக்கை விபரங்கள் வருடா வருடம் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும்.