கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாரத பெட்ரோலியம் எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

மும்பையில் உள்ள பாரத பெட்ரோலியம் எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் சனிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :7 அக்டோபர் 2017, 9:40 am

DIN

மும்பை புறநகர் பகுதியில் அரேபியக் கடலின் அருகே அமைந்துள்ள புட்சர் தீவில் பாரத பெட்ரோலியத்துறைக்குச் சொந்தமான எரிபொருள் சேமிப்புக் கிடங்கு உள்ளது.

அரேபியக் கடலில் உள்ள இந்த சிறிய தீவு மும்பை கப்பல் தளவாடத்துக்குச் சொந்தமானது. இங்கு கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்கு உள்ளது.

மும்பைக்கு வரும் எரிபொருள் முதலில் இங்கு வைக்கப்படும். பின்னர் இங்கிருந்து வாடாலா என்ற இடத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அணுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில், இப்பகுதியில் இருந்து திடீரென கறும்புகை வெளியானது. அது அங்கிருந்து சுமார் 2 கிலோ மீ்ட்டர் தொலைவுக்கு காணப்பட்டது. அப்போது இந்தப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, 50 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த கடுமையாகப் போராடினர். சுமார் 20 மணிநேர தொடர் போராட்டத்துக்குப் பிறகு இந்த தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து மும்பை கப்பல் தளவாடத்தின் அதிகாரி மனோகர் ராவ் கூறியதாவது:

புட்சர் தீவில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் சனிக்கிழமை காலை 5 மணியளவில் மின்னல் தாக்கியது.

இதனால் அப்பகுதி முழுவதும் தீ விபத்து ஏற்பட்டது. அதில் சுமார் 40,000 டன் கச்சா எண்ணெய் முற்றிலும் எரிந்து நாசமானது. மொத்த எரிபொருள் சேமிப்பில் இருந்து 25 சதவீதத்தை இழந்துவிட்டோம். 

தீ விபத்தை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.