சாலையில் இறங்கிய போர் விமானங்கள்: வியக்க வைத்த இந்திய விமானப்படை சாகசம்!

போர் விமானங்கள் உள்ளிட்ட இந்திய விமானப்படை விமானங்கள் நெடுஞ்சாலையில் இறங்கி, பின்னர் மேலெழும்பி பறக்கும் 'டச் டவுன்' பயிற்சிகள் இன்று நிகழ்த்தப்பட்டன.
சாலையில் இறங்கிய போர் விமானங்கள்: வியக்க வைத்த இந்திய விமானப்படை சாகசம்!

லக்னௌ: போர் விமானங்கள் உள்ளிட்ட இந்திய விமானப்படை விமானங்கள் நெடுஞ்சாலையில் இறங்கி, பின்னர் மேலெழும்பி பறக்கும் 'டச் டவுன்' பயிற்சிகள் இன்று நிகழ்த்தப்பட்டன.

நெருக்கடியான காலத்தில் சாலைகளை விமான ஓடுதளங்களாக பயன்படுத்துவது என்பது இந்திய விமானபடையின் அவசர காலப் பயிற்சிகளில் ஒன்று. இத்தகைய சாகசங்கள் 'டச் டவுன் பயிற்சிகள்' என்று அழைக்கப்படுகின்றன.

அது போன்றதொரு சாகச பயிற்சிகள் இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் நடைபெற்றன. அங்குள்ள  உன்னோ மாவட்டத்தில் பங்கார்மு என்ற இடத்தில் இன்று காலை பயிற்சிகள் நடைபெற்றன.

இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையின் போக்குவரத்திற்கான AN-32 ரக விமானங்கள், மிராஜ்-2000  மற்றும் சுகோய் 32  MKI உள்ளிட்ட விமானங்கள் பங்கு பெற்றன.

ஏராளமான பொதுமக்கள் சாலை ஓரங்களில்கூடி இந்த பயிற்சிகளை கண்டு களித்தனர். இதற்காக இந்த சாலைப்பகுதியினை முறையாக தயார் செய்ய, கடந்த 20-ஆம் தேதியில் இருந்து, போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com