வங்கி ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்களைத் தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆடிஐ) கீழ் தெரிவிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கனரா வங்கியின் முன்னாள் ஊழியர் ஒருவர் கடந்த 2002-ஆம் ஆண்டு ஜனவரி முதல், 2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பணிமாற்றம் செய்யப்பட்ட எழுத்தர்கள் (கிளர்க்) குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார்.
வங்கி ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதிலிருந்து ஆர்டிஐ சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறி தகவல்களை வெளியிட கனரா வங்கி மறுத்துவிட்டது.
இதையடுத்து, தலைமைத் தகவல் அதிகாரியும் அவரது மனுவை நிராகரித்ததால், மத்தியத் தகவல் ஆணையத்தை (சிஐசி) அவர் அணுகி மேல்முறையீடு செய்தார். அந்த நபர் கேட்ட தகவல்களை அளிக்குமாறு கனரா வங்கிக்கு சிஐசி உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கனரா வங்கி மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம் சிஐசி உத்தரவை உறுதி செய்தது. இதையடுத்து, இரண்டு உத்தரவுகளையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கனரா வங்கி மேல்முறையீடு செய்தது.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "அந்த நபர் பொது நலன் கருதி இந்தத் தகவல்களைக் கேட்கவில்லை. தனிப்பட்ட நலன் கருதி கேட்டிருக்கிறார். எனவே, ஊழியர்களின் தகவல்களை கனரா வங்கி வெளியிடத் தேவையில்லை' என்று உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகம் எதிர்கொள்ளும்!

முன்னேற்றத்துக்கு வித்திடும் கணக்கெடுப்பு!

மா்ம காய்ச்சலில் சிறுமி உயிரிழப்பு

பெண் குழந்தைகளை காப்போம் - கற்பிப்போம்: விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



