ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அலுவலக உதவியாளர்: தில்லி தனியார் பள்ளியில் பயங்கரம்!
தலைநகர் தில்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுமியை, அலுவலக உதவியாளர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.


தில்லி: தலைநகர் தில்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுமியை, அலுவலக உதவியாளர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தில்லியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வந்த 5 வயது சிறுமியை அங்கு அலுவலக உதவியாளராக வேலை செய்யும் விகாஸ் (40) என்பவன் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். பெற்றோரின் புகாரினைத் தொடர்ந்து குற்றவாளி விகாஸ் தற்பொழுது கைது செய்ப்பட்டுள்ளான்.
முன்னதாக விகாஸ் குறிப்பிட்ட அந்த பள்ளியில் கடந்த மூன்று வருடங்களாக பணியாற்றி வந்துள்ளான். முதலில் அங்கு அவன் காவலராக பணியாற்றி உள்ளான். சம்பவத்தன்று பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு வகுப்பறைக்கு திரும்பிய குழந்தையை விகாஸ் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான்
பின்னர் இதை பற்றி வெளியே கூறக் கூடாது என்று விகாஸ் குழந்தையை பின்னர் மிரட்டியும் உள்ளான். ஆனால் மாலை சிறுமி வீட்டிற்கு திரும்பியதும், அவளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட பின்னர் பெற்றோருக்கு விஷயம் தெரிந்துள்ளது.
உடனடியாக அந்த சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் போலீசில் புகார் செய்த பின்னர், விகாஸ் கைது செய்யப்பட்டன்.
நேற்று முன்தினம் குர்கானில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் உள்ள கழிவறை ஒன்றுக்குள் 2-ம் வகுப்பு மாணவன் கழுத்தறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தான். இந்நிலையில் தற்பொழுது இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...