வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதில் காலம் தாழ்த்தியது ஏன்?: காங்கிரஸ் கேள்வி

தமிழகத்தில் தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்யும் விவகாரத்தில், பேரவைத் தலைவர் ப.தனபாலும், ஆளுநர் வித்யாசாகர் ராவும் காலம் தாழ்த்தியது ஏன்?

News image
Updated On :18 செப்டம்பர் 2017, 8:43 pm

DIN

தமிழகத்தில் தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்யும் விவகாரத்தில், பேரவைத் தலைவர் ப.தனபாலும், ஆளுநர் வித்யாசாகர் ராவும் காலம் தாழ்த்தியது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மற்றொரு கட்சியைப் பற்றி கருத்து தெரிவிப்பதில் காங்கிரஸ் கட்சி மிகவும் கவனமாக உள்ளது. எனினும், அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் ஆளுநரும், பேரவைத் தலைவரும் மிகவும் காலம் தாழ்த்தியுள்ளனர். இதில் உள்நோக்கம் இருந்ததா என தெரிய வேண்டும். எனவே, எம்எல்ஏக்களின் தகுதிநீக்க விவகாரம், நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.