அசர வைக்கும் தலைநகர் அமராவதி: ஐடியா கொடுக்கும் பாஹுபலி இயக்குனர் ராஜமவுலி!

ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகராக உருவாகவிருக்கும் அமராவதியில், முக்கிய கட்டிடங்களின் வடிவமைப்பு தொடர்பாக பாஹுபலி இயக்குனர் ராஜமவுலி ஆலோசனைகள் வழங்கவிருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அசர வைக்கும் தலைநகர் அமராவதி: ஐடியா கொடுக்கும் பாஹுபலி இயக்குனர் ராஜமவுலி!

விஜயவாடா: ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகராக உருவாகவிருக்கும் அமராவதியில், முக்கிய கட்டிடங்களின் வடிவமைப்பு தொடர்பாக பாஹுபலி இயக்குனர் ராஜமவுலி ஆலோசனைகள் வழங்கவிருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திரா மாநிலமானது ஆந்திரா மற்றும் தெலுங்கானா என்று இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவின் தலைநகராக 'அமராவதி என்ற புதிய நகரை நிர்மாணிப்பது என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார்.

இதற்காக இங்கிலாந்தின் தலைநகர் லண்டனைச் சேர்ந்த பாஸ்டர் ப்ளஸ் பார்ட்னர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படைப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அமராவதி நகரத்தில் அமைக்கப்படவுள்ள கட்டடங்கள் யாவும் தெலுங்கு பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை பின்பற்றி அமைய வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு விரும்பினார்.

இதற்காக சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாஹுபலி திரைப்படத்தில் தத்ரூபமாக பழங்கால கட்டடங்களை கணிப்பொறி நுட்பத்தில் உருவாக்கிய பிரபல இயக்குனர் ராஜமவுலியின் உதவியினைக் கோருவது என்று முடிவு செயப்பட்டது. இதற்காக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நாராயணா தலைமையில் உயர் அதிகாரிகள் ராஜமவுலியை  கடந்த வாரம் சந்தித்துப் பேசினார்கள் அப்பொழுது  அமராவதியில் புதிதாக அமையவுள்ள சட்டப்பேரவைக் கட்டடம் மற்றும் உயர் நீதிமன்ற கட்டட வடிவமைப்பு குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக  ராஜமவுலி இன்று அமராவதியில் புதிய தலைநகரம் அமையவுள்ள இடத்திற்கு வந்தார். அங்கு புதிய சட்டப்பேரவைக் கட்டடம் மற்றும் உயர் நீதிமன்றம் அமையவுள்ள இடங்களைப் பார்வையிட்டார். பின்னர் அவர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பேசினார். அவரிடம் கட்டட வடிவமைப்பு குறித்து ஆலோசனைகள் நடத்தினார்.  

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அமராவதியில் உருவாக்கப்படவுள்ள கட்டடங்களின் வடிவமைப்பு மேம்பாடு தொடர்பாக தேவையான எல்லா உதவிகளையும் செய்ய உள்ளதாக தெரிவித்தார். அத்துடன் குறிப்பிட்ட பாஸ்டர் ப்ளஸ் பார்ட்னர்ஸ் கட்டுமான நிறுவனம் உருவாகியுள்ள வடிமைப்புகளை முழுக்க அறிந்த பின், அவர்களுடன் பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com