பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

இணைக்கப்பட்ட 6 வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30க்குப் பின் செல்லாது: எஸ்பிஐ அறிவிப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைந்த 6 துணை வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:41 pm

DIN


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைந்த 6 துணை வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த 6 வங்கிக் கிளைகளிலும் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்திய பினான்சியல் சிஸ்டம் (IFS) கோட் கொண்ட புதிய காசோலைப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

பாரதிய மகிலா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்பதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Story image

இதில்லாமல், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ராய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப்  திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய ஆறு வங்கிகளின் கிளைகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் புதிய காசோலைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆறு வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து விட்டதால், வங்கிகளின் பழைய காசோலைகளும், அதன் ஐஎஃப்எஸ் கோட் எண்களும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.