ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

டாடா பஞ்ச் இவி பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம்!

டாடா நிறுவனத்தின் பஞ்ச் எலெக்ட்ரிக் காரில் கூடுதல் வசதிகள்..

Tata Punch EV Facelift

டாடா பஞ்ச் இவி பேஸ்லிப்ட்

Published On :

டாடா நிறுவனத்தின் பஞ்ச் எலெக்ட்ரிக் காரில் கூடுதல் வசதிகள் சேர்த்து பேஸ்லிப்ட் மாடலாக அறிமுகம் செய்துள்ளது.

டாடா பஞ்ச் இவி அறிமுகப்படுத்தப்பட்டு சில வருடங்களே ஆன நிலையில், கார் தயாரிப்பாளர் தற்போது மின்சார எஸ்யுவியில் கூடுதல் வசதிகள் இணைத்து புதிய பேஸ்லிப்ட் மாடலை வழங்கியுள்ளது. டாடா இவி ஐந்து வகைகளில் வழங்குகிறது. ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் எஸ். எஸ்யுவிக்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

புதிய பஞ்ச் இவி பேஸ்லிப்ட் மாடலில் சிறப்பம்சங்கள் என்ன?

இதில் 10.25 அங்குல தொடுதிரை, 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்டுரூமெண்ட் கிளாஸ்டர், சன்ரூப் கனெக்டெட் தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜர், முன் வெண்டிலேஷன் இருக்கைகள் மற்றும் ஆம்ரியன்ட் லைட்டிங் போன்ற பல நவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பிலும் முக்கிய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. எலெக்ட்ரானிஸ் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் காற்றழுத்த கண்காணிப்பு அமைப்பு மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மாடல் 30 கி.வா. பேட்டரி 365 கிலோ மீட்டர் பயண தூரத்தையும், 40 கி.வா. 468 கிலோமீட்டர் பயண தூரத்தையும் இந்த பேட்டரி வழங்குகிறது.

பஞ்ச் இவி ஆரம்ப விலை 6.49 லட்சம் மற்றும் ரூ. 9.69 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சூப்பர்நோவா காப்பர், பியூர் க்ரே, பிரிஸ்டின் வைட், பெங்கால் ரூஜ் ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கின்றது. மேலும் கேரமல், எம்பவர்டு ஆக்சைடு மற்றும் ஃபியர்லெஸ் யெல்லோ ஆகியவை உயர் ட்ரிம்களில் மட்டுமே கிடைக்கின்றன.

Summary

Tata Punch EV Facelift Base Variant Revealed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.