

டாடா பஞ்ச் நிறுவனம் 2026-ல் புதிதாக பஞ்ச் பேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது.
150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம், வலுவான நெறிமுறைகளுக்குப் பெயர் பெற்ற இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றுதான் டாடா நிறுவனம்.
இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்துவரும் கார்களில் ஒன்றுதான் டாடா பஞ்ச். ஒவ்வொரு வருடமும் தனது மாடலை மேம்படுத்திப் புதுப்பித்து வருகிறது. மற்ற ஆடம்பரக்காரை ஒப்பிடும்போது, இந்த காரின் விலை சாதாரண மக்களுக்கு பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் விலை குறைவாகவும், பாதுகாப்பாகவும் டாடா நிறுவனம் வழங்கிவருகின்றது.
அந்தவகையில், தற்போது ஃபேஸ்லிஃப்ட் மாடலை கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பாகும்.
என்னென்ன சிறப்பம்சங்கள்
இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், அதிகபட்சமாக 118 பி.எச்.பி. பவரையும், 170 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.
இதேபோன்று 1.2 லிட்டர் என்.ஏ. பெட்ரோல் வேரியண்டும் உள்ளது. இது அதிகபட்சமாக 87 பி.எச்.பி. பவரையும், 170 எம்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் என இரண்டு வேரியண்டுகள் உள்ளன.
தோற்றத்தைப் பொறுத்தவரை முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் புதிய பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், வயல்லெஸ் சார்ஜர், வாய்ஸ் அசிஸ்ட் உடன் கூடிய சன்ரூப், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் எல்இடி பாக்(fog) லைட்டுகள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு பாரத் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் குறியீட்டு அந்தஸ்தும் பெற்றுள்ளது. இதன் ஆரம்ப ஷோரூம் விலை சுமார் ரூ. 5.59 லட்சம் எனவும், டர்போ வேரியண்ட்டான 1.2 லிட்டர் டர்போ எம்டிடி ரூ. 8.29 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் கார் வாங்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும் என்பது மிகையல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.