தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்திருப்பது பற்றி...
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்PTI
Updated on
1 min read

தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னததை இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை ஒதுக்கியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் போட்டியிட பொது சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்தாண்டே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்ற 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டு அதில் ஒன்றை ஒதுக்குமாறு மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்துக்கு பொதுச் சின்னமாக விசிலை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தவெக அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி, கணக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் முதல் தேர்தலிலேயே விஜய் தலைமையிலான தவெகவினர் பொதுச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

Summary

Whistle symbol has been allocated to the TVK: ECI

தவெக தலைவர் விஜய்
என்டிஏ கூட்டணியில் தமாகா, புதிய நீதிக் கட்சி! தனிச் சின்னத்தில் போட்டி என ஜி.கே. வாசன் அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com