என்டிஏ கூட்டணியில் தமாகா, புதிய நீதிக் கட்சி! தனிச் சின்னத்தில் போட்டி என ஜி.கே. வாசன் அறிவிப்பு!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகா, புதிய நீதிக் கட்சி இணைந்தது பற்றி...
Tamil Maanila Congress , Puthiya Needhi Katchi joined in NDA alliance
பியூஷ் கோயலுடன் ஜி.கே. வாசன், ஏ.சி. சண்முகம்
Updated on
1 min read

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்ந்து நீடிக்கிறது.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தற்போது கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி), அமமுக இணைந்துள்ள நிலையில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனுடன் சந்திப்பு மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில் இருவரும் கூட்டணியை உறுதிசெய்த நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிகிறது.

அதேபோல புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகமும் இன்று பியூஷ் கோயலைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த கட்சியும் ஏற்கெனவே என்டிஏ கூட்டணியில் உள்ளது.

இதன்பின்னர் பியூஷ் கோயல், ஜி.கே. வாசன், ஏ.சி. சண்முகம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

பியூஷ் கோயல் பேசுகையில், "பிகாரில் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணியை மக்கள் நிராகரித்துவிட்டார்கள். காங்கிரஸுக்கு தலைமைத்துவம் இல்லை. வரும் தேர்தலில் காங்கிரஸ் காலாவதியாகும்.

சமூகத்தை பிளவுபடுத்தும் தமிழக மக்களை புண்படுத்தும் உதயநிதியின் கருத்துகள் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழ் மொழியை தமிழ் மக்களை தமிழ் கலாசாரத்தை திமுகவினர் தொடர்ந்து விமர்சிக்கின்றனர். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். திமுக - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும். தேசிய விரோத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

என்டிஏ கூட்டணி அரசு அமைந்தவுடன் தமிழ்நாட்டுக்கு நல்ல ஆட்சியை வளர்ச்சிமிகுந்த ஆட்சியை கொடுப்போம். எங்கள் ஆட்சி அனைத்து மக்களுக்குமான ஆட்சியாக இருக்கும்" என்றார்.

ஜி.கே. வாசன் பேசுகையில், "மக்கள் விரோத கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். ஒத்த கருத்துடையவர்கள் அனைவரும் என்டிஏ கூட்டணியில் இணைய வேண்டும். தனி சின்னத்தில் தாமாக போட்டியிடும்" என்றார்.

ஆட்சியில் பங்கு உண்டா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பியூஷ் கோயல், "நாங்கள் ஒரே குடும்பம்போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களுடைய குடும்பத்தில் கலந்தாலோசித்து நாங்கள் முடிவெடுத்துக்கொள்வோம்" என்றார்.

Summary

Tamil Maanila Congress , Puthiya Needhi Katchi joined in NDA alliance

Tamil Maanila Congress , Puthiya Needhi Katchi joined in NDA alliance
ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதியில்லை; விழாவைப் புறக்கணிக்கிறேன்: கோவி. செழியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com