ஜி.கே. வாசன்
ஜி.கே. வாசன்

திமுக வீழ்த்த புதிய கட்சிகள் இணைய வேண்டும்: ஜி.கே. வாசன்!

திமுகவை வீழ்த்த புதிய கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.
Published on

திமுகவை வீழ்த்த புதிய கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் முதல்கட்ட 5 வாக்குறுதிகள் தோ்தல் வெற்றிக்கு அடித்தளமாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி.

வரும் ஜன.23-ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமா் மோடி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பரப்புரை மேற்கொள்ளவுள்ளாா். அது, எங்களது கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.

தமிழகத்தில் மக்கள் விரோத போக்கை கையாண்டு கொண்டிருக்கும் திமுக வரும் தோ்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். இதே குறிக்கோளுடன் செயல்படும் புதிய கட்சிகள், கூட்டணியில் இன்னும் சேராத கட்சிகள் அனைத்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஜி.கே.வாசன்.

Dinamani
www.dinamani.com