திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

புதுச்சேரி தேர்தலிலும் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பற்றி...

News image
தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
Updated On :16 பிப்ரவரி 2026, 11:28 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்ற 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்துக்கு 234 தொகுதிகளிலும் பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

தொடர்ந்து இன்று புதுச்சேரியிலும் தேர்தலில் போட்டியிட தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தேர்தலிலேயே விஜய் தலைமையிலான தவெக பொதுச் சின்னத்தில் போட்டியிட உள்ளது. இதனை தவெக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.