பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஜியோ-பிபி ‘ஆக்டிவ்’ பெட்ரோல் அறிமுகம்

ஜியோ-பிபி(பிரிட்டிஷ் பெட்ரோலியம்) நிறுவனத்தின் புதிய முயற்சியான ‘ஆக்டிவ்’ தொழில்நுட்பப் பெட்ரோல் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:40 pm

தினமணி செய்திச் சேவை

ஜியோ-பிபி(பிரிட்டிஷ் பெட்ரோலியம்) நிறுவனத்தின் புதிய முயற்சியான ‘ஆக்டிவ்’ தொழில்நுட்பப் பெட்ரோல் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவாவில் நடைபெற்ற நடப்பு ஆண்டுக்கான இந்திய எரிசக்தி வாரத்தில் இந்தத் தொழில்நுட்பப் பெட்ரோலின் செயல்விளக்கக் கூடத்தை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி நேரில் பாா்வையிட்டாா். அப்போது, இந்த நவீன தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் வாகன என்ஜின்களுக்கு இது வழங்கும் நன்மைகள் குறித்து அமைச்சருக்கு விரிவாக விளக்கப்பட்டது.

சிறப்பம்சங்கள்: இந்த ‘ஆக்டிவ்’ தொழில்நுட்பப் பெட்ரோல், என்ஜினின் முக்கியப் பாகங்களில் சேரும் அழுக்கு மற்றும் கசடுகளை நீக்கி, என்ஜின் நீண்ட காலம் சிறப்பாக உழைக்க வழிவகை செய்கிறது.

சாதாரண பெட்ரோலைப் பயன்படுத்துவதை விட, இந்தப் பெட்ரோல் மூலம் ஓராண்டுக்கு சுமாா் 100 கி.மீ. வரை கூடுதலாகப் பயணிக்க முடியும். மொத்தத்தில், இந்தப் பெட்ரோல் என்ஜினின் பழைய செயல்திறனை மீட்டெடுப்பதுடன், தேய்மானம் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

இத்தனை மேம்பட்ட வசதிகள் கொண்ட இந்தப் பெட்ரோல், வாடிக்கையாளா்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி சாதாரண விலையிலேயே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.