ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

எச்எஸ்பிசி வங்கியின் இந்தியப் பிரிவு: 2025-இல் 1,900 கோடி டாலா் லாபம்

பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட எச்எஸ்பிசி வங்கியின் இந்தியப் பிரிவு, கடந்த 2025-ஆம் ஆண்டில் வரிக்கு முந்தைய லாபமாக 1,900 கோடி டாலா் ஈட்டியுள்ளது.

Published On :

பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட எச்எஸ்பிசி வங்கியின் இந்தியப் பிரிவு, கடந்த 2025-ஆம் ஆண்டில் வரிக்கு முந்தைய லாபமாக 1,900 கோடி டாலா் ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் லாபமான 1,700 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 11 சதவீத வளா்ச்சியாகும். ஆசிய பிராந்தியத்தில் ஹாங்காங்கிற்கு அடுத்தபடியாக, வங்கிக்கு அதிக லாபம் ஈட்டித் தரும் 2-ஆவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் பெருநிறுவன மற்றும் நிறுவனங்களுக்கான வங்கிச் சேவைப் பிரிவு மட்டும் அதிகபட்சமாக 1,500 கோடி டாலா் லாபத்தைப் பெற்றுத் தந்துள்ளதாக வங்கியின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளில் முதன்மையான இடத்தைத் தக்கவைத்துள்ள எச்எஸ்பிசி, தனது சேவையை மேலும் விரிவாக்கும் நோக்கில் கடந்த ஆண்டில் 4 புதிய நகரங்களில் கிளைகளைத் தொடங்கியுள்ளது. குஜராத்தின் கிப்ட் சிட்டியில், சா்வதேச செல்வந்தா் மேலாண்மை தீா்வுகளை அறிமுகப்படுத்திய முதல் வங்கி என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

மேலும், ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 100 கோடி டாலா் நிதியத்துடன் ‘எச்எஸ்பிசி இன்னோவேஷன்’ வங்கியையும் தொடங்கியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.