ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் ஜிம்பாப்வே நாட்டுப் பெண் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-ஆவது கதவு வழியாக திங்கள்கிழமை இரவு 8:30 மணியளவில் வெளியான ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை விமான நிலைய பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அவரிடம் இருந்து ரூ.15 கோடி மதிப்புள்ள 3 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவரது உடமைகள் கதிர்வீச்சு முறையில் பரிசோதித்த போது பிடிபட்டது. பின்னர் நடத்திய விசாரணையில் அவர் பெயர் பெட்டி ராமே எனவும் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
பின்னர் அடுத்த கட்ட விசாரணைக்காக விமான நிலைய பாதுகாப்புப் படையினர் அவரை போதை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் செவ்வாய்கிழமை ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏமா(ற்)றுகிறார்கள்!

திரு.வி.க. நகர்: திமுகவுக்கு சவாலாக இருக்குமா அனுதாப அலை!

ஆர்.கே.நகர்: கைப்பற்றும் முயற்சியில் திமுக - அதிமுக!

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


