மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

காஷ்மீர் கொலைகளுக்கு அனைத்து நாடுகளும் கண்டனம்: அஃப்ரிடி ட்வீட் குறித்து ஃபரூக் அப்துல்லா

காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருவதாக ஃபரூக் அப்துல்லா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :4 ஏப்ரல் 2018, 10:56 am

அடக்குமுறை ஆட்சியின் கீழ் இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் அபாயகரமான மற்றும் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. இங்கு அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். சுதந்திரத்துக்கும், சுய சிந்தனை எண்ணத்துக்கும் எதிராக அடக்குமுறை ஆட்சியின் கீழ் சவால் விடப்படுகிறது. இந்த அத்துமீறல் சம்பவங்கள் நடைபெறும் வேளையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் எங்கு இருக்கிறது என்று தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. இந்த கொடூர சம்பவத்தை தடுக்க அவர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:

காஷ்மீரில் நடைபெற்று வரும் படுகொலைகள் குறித்து அனைவரும், அனைத்து நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.