மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

சிபிஎஸ்இ வினாத்தாள் விவகாரம்: அனைத்து மனுக்களும் தள்ளுபடி

சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2018, 10:02 am

சிபிஎஸ்இ அமைப்பால் நடத்தப்பட்ட 12-ஆம் வகுப்பு பொருளியல் பாடத் தேர்வுக்கான வினாத்தாளும், 10-ஆம் வகுப்பு கணித பாடத் தேர்வுக்கான வினாத்தாளும் கசிந்ததாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

சிபிஎஸ்இ அமைப்பின் புகாரின்பேரில், பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தில்லியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, பொருளாதாரப் பாடத்துக்கு வரும் 25-ஆம் தேதி நாடு முழுவதும் மறுதேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில், உச்ச நீதிமன்ர நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டி மற்றும் நாகேஸ்வர் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்குகள் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, போதிய அடிப்படை ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இந்த 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.