கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஜேஎன்யுவில் இடஒதுக்கீடு விவகாரம்: ஜாவடேகருக்கு எம்.பி.க்கள் கடிதம்

தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு கொள்கையில் விதிமுறை மீறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் தலையிடுமாறு

Updated On :6 ஏப்ரல் 2018, 1:05 am IST

தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு கொள்கையில் விதிமுறை மீறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் தலையிடுமாறு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த 30-க்கும் அதிகமான எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், ஜாவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜேஎன்யுவில் மாணவர்கள் சேர்க்கையில் பாகுபாடு காட்டப்படுகிறதா? என்பதை கண்டறிவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டில் குழு ஒன்றை ஜேஎன்யு அமைத்தது.
மாணவர்கள் சேர்க்கையில் பாகுபாடு காட்டப்படாமல் தவிர்ப்பதற்கு நேர்முகத்தேர்வில் நடைமுறையில் உள்ள 30 மதிப்பெண்களை 15-ஆகக் குறைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. இது, கடந்த 1989-ஆம் ஆண்டு எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம், மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர்கள் சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டம், 2006, ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. எனவே, இடஒதுக்கீடு பலன்களை மாணவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டு பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்களவைக்கு ஜேஎன்யு மாணவர்கள் சங்கம் புதன்கிழமை வலியுறுத்தியிருந்தது.
அந்தச் சங்கத்தின் தலைவர் கீதா குமாரி கூறுகையில், 'ஜேஎன்யுவில் சேர்வதற்கு முன்பு எழுத்துத் தேர்வு மூலம் 70 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வு மூலம் 30 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இரு தேர்வுகளிலும் எடுக்கும் மதிப்பெண்களை சேர்த்து மதிப்பிட்டு இனி மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். இடஒதுக்கீடு பலன்கள் முழுமையாக கிடைக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.