வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பதால் மட்டும் வங்கிக் கடன் முறைகேடுகளை தடுத்துவிட முடியுமா? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆதார் அட்டை வழங்கும் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டதுதானா? என்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அரசியல்சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் நீதிமன்றத்தில் கூறியதாவது:
கைவிரல் ரேகை, கண் கரு விழிப்படலம் போன்றவற்றை உறுதிப்படுத்தி அளிக்கப்படும் அடையாள ஆவணமான ஆதார் மூலம் வங்கி முறைகேடு, கருப்புப் பண முறைகேடு, வருமான வரி ஏய்ப்பு, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி செல்வது தடுக்கப்படும். செல்லிடப்பேசி எண்ணுடன்ஆதார் எண்ணை இணைப்பதால் பயங்கரவாதிகள் செல்லிடப்பேசியை பயன்படுத்தி சதி செய்வது முறியடிக்கப்படும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட திட்டமிடுபவர்கள் முறைப்படி ஆதாரை இணைத்துதான் சிம் கார்டுகளை வாங்குவாôர்களா? எதோ ஒரு சில பயங்கரவாதிகளைப் பிடிக்க உதவும் என்று, 120 கோடி மக்களையும் செல்லிடப்பேசி எண்ணுடன் இணைக்கக் கூறுவது சரியானதுதானா?
இப்போது நிகழ்ந்துள்ள வங்கி முறைகேடுகளில் எதுவும் அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்டது அல்ல. வங்கி முறைகேட்டில் ஈடுபட்டது யார் என்பது அனைவருக்குமே தெரிகிறது. இதனால், ஆதாரை இணைப்பதால் மட்டும் வங்கி முறைகேடுகளைத் தடுத்து விட முடியும் என்று எப்படிக் கூற முடியும்?
முறைகேடு செய்பவர்களுடன் வங்கி அதிகாரிகள் மறைமுகமாக கைகோத்து செயல்பட்டதுதான் பெரும்பாலான வங்கிக் கடன் முறைகேடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியுமா?. யாருக்கு கடன் கொடுக்கிறோம் என்பது தெரியாமல் எந்த வங்கியும் கடன் கொடுக்கவில்லை. எனவே, ஆதார் இணைப்பு மட்டுமே வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் என்று கூறிவிட முடியாது.
வன்முறை நிகழும் பகுதிகளில் அவற்றைக் கட்டுப்படுத்த இணையதள சேவை, செல்லிடப்பேசி சேவையை அரசு தற்காலிகமாக முடக்கி வருகிறது. இது தொடர்பாக மக்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், ஆதாரை செல்லிடப்பேசி எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கூறும்போதுதான் கேள்வி எழுகிறது.
ஆதார் ஏழைகளின் மேம்பாட்டுக்கு உதவும் என்றும் ஒரு வாதத்தை அரசுத் தரப்பு முன்வைத்துள்ளது. ஆனால், நாடு சுதந்திரமடைந்தது முதல் இப்போது வரை ஏழைகள் - பணக்காரர்கள் இடைவெளி அதிகரித்துதான் செல்கிறது. நாட்டில் உள்ள செல்வத்தில் 67 சதவீதம், ஒரு சதவீதம் பேரிடம் மட்டும்தான் குவிந்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்களின் சதவீதம் குறைகிறதே தவிர, அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. ஆதார் வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. ஆனால், அனைத்து விஷயத்துக்கும் ஆதார் கண்டிப்பாக வேண்டும் என்று கூறப்படும்போதுதான் எதிர்ப்பு எழுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் அழைப்பு!

பெனால்டி கொடுக்காதது ஏன்? இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்ட நடுவர்களை விமர்சிக்கும் ரசிகர்கள்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
நூற்றாண்டு காணும் கவிஞர் கண்ணதாசனின் வண்ணச் சித்திரங்கள்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



