இடுப்பு வலிக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீரிழிவு நோய்க்கான சிகிச்சையை மூத்த மருத்துவர் ஒருவர் மாற்றி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவறான சிகிச்சையை மறைக்க அந்த மூத்த மருத்துவர், நோயாளியின் மருத்துவ அறிக்கையை மாற்றி எழுதி முறைகேடும் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டின் தலைசிறந்த மூத்த மருத்துவர்களைக் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்றுள்ள இந்த மருத்துவ அலட்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைத்து தில்லி எய்ம்ஸ் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
பிகார் மாநிலம் சாஹர்சா பகுதியைச் சேர்ந்த ரேகா தேவிக்கு (30) அவரது ஊரிலே உள்ள மருத்துவமனையில் ஏற்கெனவே இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இடுப்பு பகுதியில் வலி இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக தில்லி எய்ம்ல் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி, அவரது இடுப்பு வலிக்கான காரணத்தை கண்டறிய, மயக்க மருந்து அளித்து சிறிய அறுவைச் சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு ரேகா தேவிக்கு, சக்கரை நோயால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் டயாலைஸில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதை அன்று பணியில் இருந்த செவிலியர்களின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை முடிந்த பிறகு நோயாளியிடம் பேசிய பிறகுதான் அவருக்கு சீறுநீரக பிரச்னை இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நோயாளியுடன் வந்திருந்தவர்களிடம் பக்குவமாக தெரிவித்துவிட்டு மறுநாள் சரியான சிகிக்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான சிகிச்சையின் விவரம் நோயாளியின் மருத்துவ அறிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால், செவிலியர்களின் மருத்துவ விவர பதிவு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த விவகாரம் மருத்துவமனை வட்டாரங்களில் தெரியவந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட துறையின் தலைவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், அறுவை சிகிச்சை துறையில் உள்ள மூத்த மருத்துவரின் அலட்சியத்தால்தான் இந்த தவறான சிகிச்சை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.
எய்மஸ் மருத்துவமனை கண்காணிப்பாளர் டி.கே. சர்மா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையிலும் அதே மூத்த மருத்துவரின் அலட்சியத்தால்தான் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் உதவி பேராசிரியராகவும் உள்ள அந்த மூத்த மருத்துவரை அனைத்து மருத்துவ பணிகளில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த அறிக்கை எய்ம்ஸ் இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தில்லி எய்ம்ஸ் டீன் டாக்டர் ஒய்.கே. குப்தா தலைமையில் குழு அமைத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த எய்ம்ஸ் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!

வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்த பந்தன் வங்கி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



