
புதுதில்லி: தலைநகர் தில்லியில் வெள்ளியன்று மாலை திடீரென்று வீசிய புழுதிப்புயலால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்
தலைநகர் தில்லியின் அக்பர் சாலை, ராஜேந்திர பிரசாத் மார்க் மற்றும் ஆர்.கே புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை வானிலை திடீரென மாறத்தொடங்கியது.
வானில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில், தீடீர் என்று வேகமான காற்றுடன் புழுதிப்புயல் வீசத்தொடங்கியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். நடந்து சென்றவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
தில்லியை ஏற்கனவே காற்று மாசுபாடு வாட்டி வரும் வேளையில் இந்த புழுதிப்புயல் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.