ஸ்ரீநகர்: கத்வா சிறுமி பாலியல் வல்லுறவு விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பாஜக அமைச்சர்கள் இருவர் ராஜிநாமா செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் நாடோடி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிபா பாஜக பிரமுகர்கள் மற்றும் காவல் துறையினரால் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரமானது நாடு முழுவதும் கடுமையான அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் பாஜக அமைச்சர்கள் சந்திரபிரகாஷ் கங்கா மற்றும் லால் சிங் இருவரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பேரணியில் பங்கேற்ற பாஜக அமைச்சர்கள் இருவரும் தற்பொழுது ராஜிநாமா செய்துள்ளனர்.
அவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை ஜம்மு - காஷ்மீர் மாநில பா.ஜ.க. தலைவர் சத் சர்மாவிடம் அளித்துளளனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!

பாஜகவில் ஆம் ஆத்மி எம்பிக்கள்! குடியரசுத் தலைவரை சந்திக்கும் பஞ்சாப் முதல்வர்!

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


