11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் மனு மீதான விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:31 am IST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், 'இந்த வழக்கில் தொடர்புடைய விசாரணை அதிகாரி (புனித மணி) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, விசாரணையை மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'இந்த வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது' எனத் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 14-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'ராஜீவ் கொலை வழக்கில் 1998, மே 11-ஆம் தேதி விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரும் மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்கு தொடர்பான நிலவர அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு விசாரணை அமைப்பான எம்டிஎம்ஏவுக்கு உத்தரவிடப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.