
சென்னை: ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ. 600 கோடி வரை பண மோசடி செய்ததாக ஏர்செல் நிறுவன முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழகத்தின் தொலைத் தொடர்பு துறையில் முன்னோடி சேவை நிறுவனமானகத் திகழ்ந்தது ஏர்செல். இதனை உருவாக்கியவர் தமிழரான சிவசங்கரன். ஆனால் பின்னர் சர்ச்சையான ஒரு சூழ்நிலையில் தனது நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த நிறுவனமான 'மேக்சிஸ்' நிறுவனத்திற்கு விற்று விட்டார்.
ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியை சமாளிக்க முடியாமலும் அதிகமான கடன் நெருக்கடி காரணமாகவும் ஏர்செல் தன்னுடைய சேவையை வழங்குவதில் தடுமாறி வந்தது. பின்னர் சமீபத்தில் தன்னுடைய சேவையை முழுமையாக நிறுத்தி விட்டது.
இந்நிலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ. 600 கோடி வரை பண மோசடி செய்ததாக குற்றசாட்டு எழுந்ததை அடுத்து, ஏர்செல் நிறுவன முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் மீது சிபிஐ தற்பொழுது வழக்குப்பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.