திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

டோக்காலாம் விவகாரத்தில் சீனாவிடம் சுஷ்மா அடிபணிந்து விட்டார்: ராகுல் காந்தி

டோக்காலாம் விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சீன அரசிடம் அடிபணிந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:23 am IST


டோக்காலாம் விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சீன அரசிடம் அடிபணிந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் புதன்கிழமை இந்திய-சீன உறவைப் பற்றி பேசிய சுஷ்மா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் 27-28 ஆகிய தேதிகளில் சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பானது, இரு நாடுகளுக்குமிடையே உள்ள பரஸ்பர புரிதல், நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றை அதிகரித்துள்ளதாகவும், இந்தப் பரஸ்பர ஒத்துழைப்பே, இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு நிலவிய டோக்காலாம் பிரச்னையை, யாருக்கும் எந்தவித இழப்புமின்றி ராஜதந்திர முறையில் தீர்க்க உதவியதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பரஸ்பர நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, தற்போது வரை டோக்காலாம் பகுதியில் அமைதியே நிலவி வருவதாகவும், அங்குள்ள நிலையில் சிறிதளவும் மாற்றமில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சுஷ்மாவின் பேச்சை சுட்டுரைப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, சீன அரசிடம் சுஷ்மா முற்றிலுமாக அடிபணிந்து விட்டதாகத் தெரிவித்தார். சீனாவின் நடவடிக்கைகளை எதிர்க்காமல் அந்த நாட்டிடம் சுஷ்மா கெஞ்சி வருவதாகவும், இந்திய மக்களுக்காக சீன எல்லையில் மனவலிமையுடன் பணிபுரிந்து வரும் இராணுவ வீரர்களின் தியாகத்துக்கு சுஷ்மா துரோகம் இழைத்து விட்டதாகவும் ராகுல் குற்றம் சாட்டினார்.
மேலும், சுட்டுரைப் பதிவோடு சேர்த்து டோக்காலாம் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த, சீனா மீண்டும் பணிகளை அமைதியாகத் தொடக்கியுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றம் தெரிவித்த தகவலையும் ராகுல் பகிர்ந்துள்ளார். ராகுலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, டோக்காலாமில் அமைதியான சூழல் நிலவுவதாகவும், தற்போது வரை எவ்விதப் பிரச்னையும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.