என்ஆர்சி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்: மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேடு மூலம் சமூக நல்லிணக்த்தை சீர்குலைக்க சிலர் தீய உள்நோக்கத்துடன் கருத்துகளை பதிவிட்டு வருவதாக ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேடு மூலம் சமூக நல்லிணக்த்தை சீர்குலைக்க சிலர் தீய உள்நோக்கத்துடன் கருத்துகளை பதிவிட்டு வருவதாக ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினார்.

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேடு கடந்த திங்கள்கிழமை வெளியானதில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டது. இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வந்தனர். இந்த விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக சாடினார்.   

இந்த வரைவுப் பதிவேடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களைவயில் பேசுகையில், 

"ஒரு சிலர் அவசியமில்லாமல் சமூகத்தில் ஒருவித அச்சத்தை உண்டாக்குவது துரதிருஷ்டவசமானது. தவறான தகவல்களை பரப்புகின்றனர். ஒரு சிலர் தீய உள்நோக்கத்துடன் இதை சமூக வலைதளங்களில் பரப்புவதன் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்த்து, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். 

தேசத்துக்கு எதிரான இந்த அனைத்து நடவடிக்கைகளும் எதிர்க்கத்தக்கது.   

இந்த செயல்பாடுகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்திய குடிமக்களின் பெயர்களை பட்டியலில் இணைத்து இந்த வரைவுப் பதிவேடு பணியை எந்தவித பாகுபாடுமின்றி முறையாக சரிவர செயல்படுத்துவது தான் மத்திய, மாநில அரசுகளின் பணி.

பொறுப்புள்ள பதவிகளில் இருக்கும் நபர்களே மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவது வருத்தமளிக்கிறது. 

இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அஸ்ஸாமில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய படைகள் உதவி வருகிறது.   

மற்ற மாநிலங்களில் இருந்து வந்து அஸ்ஸாமில் குடிபெயர்ந்தவர்கள், அவர்களுடைய முன்னோர்கள் வசித்த இடத்துக்கான சான்றிதழ் மற்றும் அவர்களுடனான உறவை குறிப்பிடும் சான்றிதழையும் சமர்பித்து தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயரை சேர்த்துக்கொள்ளலாம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com