தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

தலித்துகளை அவமதிப்பது காங்கிரஸின் மரபு

தலித்துகளை அவமதிப்பது காங்கிரஸ் கட்சியின் மரபு என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


தலித்துகளை அவமதிப்பது காங்கிரஸ் கட்சியின் மரபு என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை தலித் விரோத மனப்பான்மை கொண்டவர் என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அமித் ஷா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வலுவான திருத்தங்களை செய்ய வேண்டும், ஒபிசி ஆணையத்தை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்டவையே பிரதமர் நரேந்திர மோடியின் மரபு. ஆனால் தலித்துகள் தலைவர்களை அவமதிப்பது, மண்டல் ஆணைய அறிக்கையை எதிர்ப்பது, ஒபிசி ஆணையத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது ஆகியவையே காங்கிரஸின் மரபு ஆகும்.
கண்களை சிமிட்டுவது, நாடாளுமன்றத்தில் இடையூறு செய்வது ஆகிய பணிகள் உங்களுக்கு இல்லாமல் இருந்தால், உண்மைகளில் குறிப்பிட்ட நேரத்தை செலவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பினால், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடை சட்டம் நீர்த்து போய்விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த சட்டத்தை வலுப்படுத்தும் வகையில், நாடாளுமன்றத்தில் பாஜக மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. அப்படியிருக்கையில், தில்லியில் எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பான விவகாரத்துக்காக ஏன் போராட்டம் நடத்தப்படுகிறது?
பாஜக ஆளும் மாநிலங்களில் தலித்துகள் தாக்கப்படுவதாகவும், ஒடுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்குப் பதிலாக, பீம் ராவ் அம்பேத்கர், பாபு ஜெகஜீவன் ராம், சிதாராம் கேசரி ஆகியோரை காங்கிரஸ் கட்சி எப்படி நடத்தியது என்பது குறித்து ராகுல் காந்தி பேசினால் நன்றாக இருக்கும். தலித்துகளை மேலாதிக்க மனோபாவத்துடனேயே காங்கிரஸ் நடத்தியது. பல ஆண்டுகளாக தலித்துகளின் விருப்பங்களை காங்கிரஸ் அவமதித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி இணைந்த அதே ஆண்டில், மத்தியில் ஆட்சியில் இருந்த 3ஆவது அணி-காங்கிரஸ் அரசு', பதவி உயர்வில் இட ஒதுக்கீடுகள் அளிக்க எதிர்ப்பு தெரிவித்ததும், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்ற ஆண்டில், வலுவான எஸ்.சி., எஸ்.டி. சட்டம் மற்றும் ஒபிசி ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் தற்செயலாகவா நடந்தது? இதிலிருந்து காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான மனோபாவம் வெளிச்சத்துக்கு வருகிறது.
ராகுல் காந்தியிடம் நேர்மையையும், பகுத்தறிவையும் எதிர்பார்ப்பது கஷ்டம்தான். மண்டல் விவகாரம் குறித்து ராஜீவ் காந்தி பேசியதை படித்து பார்த்தால், அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை அவர் முழுவதும் எதிர்த்தது தெரியும். 
அதில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மீதான வெறுப்பும், பிறர் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணமும் வெளிப்பட்டுள்ளது. 
ஆனால், தற்போது நீங்கள் தலித் நலன் குறித்து பேசுகிறீர்கள் என்று அந்தப் பதிவுகளில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.