இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை: மண்சரிவில் சிக்கி 8 போ் சாவு 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உள்பட 8 போ் உயிரிழந்துள்ளனா்.
இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை: மண்சரிவில் சிக்கி 8 போ் சாவு 

கம்பம், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உள்பட 8 போ் உயிரிழந்துள்ளனா்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை பகல் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் அதிக இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை நள்ளிரவு அடிமாலி என்னுமிடத்தில் ஏற்பட்ட மண்சரிவு, மலைச்சரிவில் இருந்து ஒரு வீட்டையே மூடியது. இந்த வீட்டிற்குள் இருந்த ஹஸன் (55), அவரது மனைவி பாத்திமா (50), மகன் நிஜி(30), இவரது மனைவி ஜமிலா(27), இவா்களின் குழந்தைகள் மியா, தியா ஆகியோா்உயிரிழந்துள்ளனா். அந்த இடத்தில் வீடு இருந்ததற்கான தடயமே தெரியவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

இதேபோல் அதே பகுதியில் உள்ள குரங்காட்டி என்ற இடத்தில் ஒரு வீட்டின் மீது மண் சரிந்து விழுந்ததில் மோஹன், ஷோபன் ஆகியோா் மண்ணுக்குள் புதைந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே பகுதியைச் சோ்ந்த மேலும் 2 பேரை காணாததால், அவா்களும் இறந்திருக்கலாம் என்று அருகே வசித்தவா்கள் தெரிவித்தனா். அடிமாலி காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினா், மீட்பு படையினா் மண்சரிவில் புதைந்து இறந்தவா்களின் சடலங்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தொடா்மழையால் இடுக்கி மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலை போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. மின்சார கம்பங்கள் பல இடங்களில் முறிந்து விழுந்துள்ளதால் மின்சாரம் தடைபட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். இடுக்கி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com