ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கேரள வெள்ளம்: மக்களின் இருப்பிடத்தை அறிய கூகுள் வழங்கும் புதிய சேவை

கேரள வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்கள் தங்கள் இருப்பிடத்தை மீட்புக் குழுவினருக்குத் தெரியப்படுத்த கூகுள் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2018, 10:55 am


புது தில்லி: கேரள வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்கள் தங்கள் இருப்பிடத்தை மீட்புக் குழுவினருக்குத் தெரியப்படுத்த கூகுள் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர்களின் செல்போனில் இணைய வசதி இல்லாவிட்டாலும், தங்களது ஆன்டிராய்ட் ஸ்மார்ட்ஃபோன் அல்லது டேப்லட்டுகளில்  தங்கள் இருப்பிடத்தை பதிவு செய்து அதில் பிளஸ் என்பதை இணைத்து பதிவிட்டால் போதும். அவர்களது இருப்பிடத்தின் சரியாக முகவரி மீட்புக் குழுவுக்கு எளிதாகக் கிடைத்துவிடும்.

வாய்ஸ் கால்ஸ் அல்லது எஸ்எம்எஸ்ஸிலும் இந்த பிளஸ் குறியைப் பயன்படுத்தலாம்.

ஒரு முகவரி இணையதளத்தில் கிடைக்கவில்லை என்றால் அதனுடன் பிளஸ் குறியை சேர்த்து தேடினால் கூகுள் மேப்பில் சரியான முகவரி கிடைக்கும். அதுபோலவே இது செயல்படும்.

இந்த பிளஸ் குறியை 6 அல்லது 7 எழுத்துக்கள் மற்றும் எண்கள் மற்றும் நகரத்தின் பெயருடன் பதிவிட வேண்டும்.

கூகுள் மேப்ஸ் செயலில் மீட்கப்பட வேண்டிய நபர் அல்லது குடும்பத்தினர், செயலியின் தேடுதல் பெட்டியில் பிளஸ் குறியைப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.