குற்றவாளி என்று சந்தேகம்: இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் விட்ட 15 பேர் கைது 

பிகாரில் கொலைக் குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் விட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளி என்று சந்தேகம்: இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் விட்ட 15 பேர் கைது 
Published on
Updated on
1 min read

போஜ்புர்: பிகாரில் கொலைக் குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் விட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிகாரின் போஜ்புர் மாவட்டத்தில் உள்ளது பிஹியா நகரம். திங்கள்கிழமை அன்று இங்குள்ள ரயில் தண்டவாளத்தில் விம்லேஷ் சவ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.  

போஜ்புர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களின் காரணமாக ஏற்கனவே ஆத்திரத்திலிருந்த ஊர் மக்கள், இந்த கொலை சம்பவத்தின் காரணமாக மீண்டும் கோபமடைந்தனர். பின்னர் உடனடியாக அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் காவல்துறை வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அத்துடன் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் என்று கருதப்பட்ட இளம்பெண் ஒருவரை சூழ்ந்து கொண்ட 15 பேர் அடங்கிய கும்பலானது, அவரைக் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது. அத்துடன் அவரது ஆடைகளைக் களைந்து அவரை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தி, ஊர்வலம் வரச் செய்துள்ளனர்.

பின்னர் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் கும்பலிடம் இருந்து அந்த பெண்ணை மீட்டு, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் தொடர்ந்து மறுத்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிஹியா நகர காவல் நிலைய அதிகாரி உள்ளிட்ட 8 காவலர்கள் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்பொழுது விசாரணையை முன்னின்று நடத்தி வரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவ்காஷ் குமார் கூறும் பொழுது, 'சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com