75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தின் பொழுது சொந்த வீடு இல்லாத குடும்பம் இருக்க கூடாது: பிரதமர் மோடி சூளுரை 

75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தின் பொழுது சொந்த வீடு இல்லாத குடும்பம் இருக்க கூடாது: பிரதமர் மோடி சூளுரை 

நமது நாடு  75 ஆண்டு சுதந்திர தினத்தினைக் கொண்டாடும் பொழுது இந்தியாவில் சொந்த வீடு இல்லாத குடும்பம் இருக்க கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Published on

அகமதாபாத்   நமது நாடு  75 ஆண்டு சுதந்திர தினத்தினைக் கொண்டாடும் பொழுது இந்தியாவில் சொந்த வீடு இல்லாத குடும்பம் இருக்க கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் சுற்றுபயணமாக பிரதமர் நரேந்திர மோடி வியாழன் காலை குஜராத் வந்தார்.  குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உள்ள ஜுஜ்வா கிராமத்தில் 'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா'  திட்ட பயனாளிகளுடன் அவர்  கலந்துரையாடினார். அப்போது  அவர் கூறியதாவது:-

இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் கண்டிப்பாக உயர்ந்த தரம் வாய்ந்தவையாக இருக்கும். யாரும் இதற்கு என ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை.

குஜராத் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. நாம் காணும் கனவுகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்பதை எனக்கு குஜராத் கற்று கொடுத்துள்ளது.

நமது நாடு  75 ஆண்டு சுதந்திர தினத்தினைக் கொண்டாடும் பொழுது இந்தியாவில் சொந்த வீடு இல்லாத குடும்பமே இருக்க கூடாது என்பதே எனது கனவு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com