ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல், சரமாரியாக குற்றம்சாட்டினார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக ரிசர்வ் வங்கி 2017-18 அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ரிசர்வ் வங்கியின் அறிக்கை பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது என்பதை காட்டுகிறது.
மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்கள் மற்றும் நரேந்திர மோடியின் நண்பர்கள் மட்டும் தான். எனவே தான் இந்த திட்டத்தை வேண்டுமென்றே அமல்படுத்தினர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவியுள்ளது. பணமதிப்பிழப்பு என்பது பிழை அல்ல, அது இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியடைந்தது குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்க வேண்டும். இதுபோன்ற ஒரு தவறை கடந்த 70 ஆண்டுகளாக வேறு எந்த பிரதமரும் செய்யவில்லை.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஆளும் பாஜக கட்சிக்கும், தொழிலதிபர் அனில் அம்பானிக்கும் தொடர்பு உள்ளது. இந்த திட்டம் ஏற்படுத்தப்படுவதற்கு சரியாக 10 நாட்களுக்கு முன்புதான் இதற்கான புது நிறுவனத்தை அனில் அம்பானி ஏற்படுத்தியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாங்கள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைவரும் விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால், அதற்கு ஆளும் கட்சித் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் இதுகுறித்து விவாதிக்க மறுத்து, தொலைக்காட்சிகளுக்கும், வலைதளங்களுக்கும் பேட்டியளித்து வருவதாக சரமாரியாக குற்றம்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





